அனுபவம் என்ற போதி மரத்தின் கீழ் தோன்றிய எண்ணங்கள் சில:
** தன் கோபத்திற்கு வடிகாலாக குழந்தையை அடிப்பதை விட கோழைத்தனம் வேறெதுவுமில்லை
** தன்னிடம் இல்லாத ஒன்று பிறரிடம் இருப்பதைக் கண்டு பொறாமைப் படாத மனம் யாரிடம் இருக்கிறதோ அவருக்கு எப்போதும் சந்தோஷம் நிலைத்திருக்கும்
** யாரிடமும் உதவி என்று போய் நிற்காமல் இருப்பதும், தன்னால் முடிந்ததைப் பிறருக்கு செய்வதும் உறவுகளை பலப்படுத்தும்
** எப்போது தேவையோ அப்போது நமக்கு நெருங்கியவரிடம் உதவி கேட்பதில் தவறேதும் இல்லை
** நம் குழந்தையை வளர்க்கும் போது தான் நம் பெற்றோர் நம்மை எவ்வளவு 'அரும்பாடு' பட்டு வளர்த்திருப்பர் என்று உணர்கிறோம். இன்னுமொரு குழந்தையை பெற்ற பிறகு தான் அவர்கள் நம் சகோதர, சகோதரிகளை ஒரே கண்ணோட்டத்தில் தான் பார்த்தார்கள் என்றும் உணர்கிறோம். நாம் உணரும் போது பெரும்பாலும் அவர்கள் நம்முடன் இருப்பதில்லை என்பதே வேதனையான விஷயம்
** ஒருவன் எல்லோருக்கும் நல்லவனாக இருக்க முடியாது, ஆனால் அதிகம் விரோதிகளை சம்பாதிக்காமல் இருப்பது அவ்வளவு கடினம் அல்ல
** உறவுகள் மிக முக்கியம். உறவுகளை பாதுகாக்க பல நேரங்களில் மன்னிப்பு அவசியமான ஒன்றாகிறது, "குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை"
\\நாம் உணரும் போது பெரும்பாலும் அவர்கள் நம்முடன் இருப்பதில்லை என்பதே வேதனையான விஷயம்//
ReplyDeleteகொஞ்சம் வலி தர்ற வரிகள் இது...