Jul 23, 2011

அமுதே தமிழே அழகிய மொழியே

இயற்கையாகவே நான் ஒரு நல்ல கவிதை ரசிகை.  நான் ரசித்த ஒரு சில பாடல் வரிகள் இங்கே...

அத்திக்காய் காய் காய் - விவரம் தெரியாத வயதில் கேட்ட போது பிடிக்கவேயில்லை.  இப்போது கவிஞரின் திறமையை மெச்சுகிறேன்.

முருகன் என்றால் அழகன் என்று தமிழ் மொழி கூறும்
அழகன் எந்தன் குமரன் என்று மனமொழி கூறும்

தன் குழந்தை அழகாக இருக்கிறதே என்று மனதுக்குள் மட்டும் வியக்கும் வார்த்தைகள்.

பொன்னொன்று கண்டேன் பெண்ணங்கு இல்லை -  அண்ணனின் நிலையையும் தம்பியின் நிலையையும் நன்றாக விளக்கியிருப்பார் கவிஞர்.

உடலுக்குள் எங்கே உயிருள்ளதென்பதும் உயிருக்குள் காதல் எங்குள்ளதென்பதும்  - காதல் மட்டுமல்ல, உண்மை, நேர்மை, கருணை, கோபம், பொறாமை இதெல்லாம் கலந்த attitude எங்குள்ளது என்று நாம் எல்லாருமே அதிசயித்திருப்போம்.

கண்ணாடிக்கு விளக்கம் தரும் (புதுப்) பொண்டாட்டியின் "அதில் என்னைக் காண்கிறேன், அது உன்னைக் காட்டுதே"

ஒவ்வொரு பற்களிலும் சிரித்தேன்.  இலக்கணப்பிழை இருந்தாலும் இதைவிட சந்தோஷத்தை எப்படி வெளிப்படுத்துவது?

விடியல் வந்த பின்னாலும் விடியாத இரவு எது?  பூ வாசம் வீசும் உந்தன் கூந்தலடி
இவ்வுலகம் இருண்ட பின்னும் இருளாத வானம் எது? கதிர் வந்து பாயும் உந்தன் கண்களடி

இரு எதிர்மறையான விஷயங்களை ஒரே பொருளுக்காகக் கையாண்டதற்காக கவிஞருக்கு ஒரு "ஓ".

இதே வரிசையில் இன்னொன்று -

சித்திரை மாதத்தை நான் நனைத்து கோடையில் உனக்கொரு குளிர் கொடுப்பேன்
மார்கழி மாதத்தை நான் எரித்து முன்பனிக் காலத்தில் அனல் கொடுப்பேன்

வானமகள் நாணுகிறாள், வேறு உடை பூணுகிறாள் - என்ன ஒரு உவமை? ரஜினி பாணியில் சொல்ல வேண்டுமென்றால் "ஹாட்ஸ் ஆஃப்"

கவிதைக்கு பொய் அழகு - உண்மை உண்மை.  கவிதையே அழகு.

இது குழந்தை பாடும் தாலாட்டு - இதை மாதிரி பாடல் எனக்கு தெரிந்து இது ஒன்று தான்.

வளையாத மூங்கிலில் ராகம் வளைஞ்சு ஓடுதே - அற்புதமான கையாளல்.

இது தவிர இரு ஹைக்கூ கவிதைகள் எங்கோ படித்தது, இன்னும் நினைவில் -

கதவைத் திறந்து வை
யார் வருகிறார்களோ இல்லையோ
காற்று வரும்


எதைக் கேட்டாலும் வெட்கத்தையே தருகிறாயே
வெட்கத்தைக் கேட்டால் என்ன தருவாய்?

இன்னும் சில, இன்னொரு இடுகையில்...

9 comments:

  1. Arumayana compilation...
    Puthuk kavithaigalin varaisayil...Vaali kovalanap patri solgayil...

    pugaaril piranthavan..
    pugaaril iranthavan..

    seethai maanidam aasai kondathai..

    Maanidam kaaka vantha
    Mathavan manaivikku
    Maanidam aasai vanthathu..

    innamum malaippaaga irukirathu..ippadi ellam sinthika mudiyuma enru..

    ReplyDelete
  2. Rajini baashaiyila unakku "hats-off". Keep going.

    ReplyDelete
  3. பார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன்
    அன்று உனைத்தேன் என நான் நினைத்தேன்
    அந்த மலைத்தேன் இதுவென மலைத்தேன் ......

    ReplyDelete
  4. ஒரு கொடியில் ஒரு முறைதான் ம‌ல‌ரும் ம‌ல‌ரல்ல‌வா
    ஒரு ம‌ன‌தில் ஒரு முறைதான் வ‌ள‌ரும் உற‌வ‌ல்ல‌வா..
    இன்று சொன்ன‌து நீ தானா சொல் சொல் சொல் என்னுயிரே...
    - எத்த‌னை முறை கேட்டாலும் க‌ண்க‌ள் ப‌னிக்கும் என‌க்கு...

    ReplyDelete
  5. கிருஷ்ணா - மானிடம் கவிதை அருமை.

    நாராயண் - அட் லாஸ்ட்...நன்றி, நன்றி.

    மேஜர் சார் - எனக்கென்னமோ அந்த பாடல் அவ்வளவு பிடித்தம் இல்லை. ஆனால் அருமையான சஹானா, அதை எப்போதும் ரசித்ததுண்டு.

    வித்யா - இந்த பாடலிலும் எனக்கு அவ்வளவு விருப்பம் இல்லை, சிதாரையே ரசித்திருக்கிறேன்.

    ReplyDelete
  6. ஒரு பெண்ணை பார்த்து நிலவைப் பார்த்தேன் நிலவில் குளிரில்லை..
    அவள் கண்ணைப் பார்த்து மலரைப் பார்த்தேன் மலரில் ஒளி இல்லை ...

    :) :) Those are all ever ever green songs for life time..

    ReplyDelete
  7. லெமூரியன் - நல்ல ஃபுட் டாப்பிங்க் பாட்டு. ஆனால் நான் பட்டியலிட்டவை எல்லாம் கவிநயம் மிக்கவை. அப்படி கவிநயம் எதுவும் இந்த பாடலில் இருப்பதாக தெரியவில்லை எனக்கு. போன வாரம் கெளசிக் என்ற சூப்பர் சிங்கர் போட்டியாளர் அருமையாகப் பாடினார்
    -Sh... I am not able to post comments under my own ID. Dont know why!

    ReplyDelete
  8. I am able to post a comment now!

    ReplyDelete
  9. Super post :)

    I regret... I follow your blog so late!

    ReplyDelete