
மெலிந்த உருவமில்லை
மயக்கும் பருவமில்லை
உயரமில்லை
தக தக தங்க நிறமில்லை
பூனைக்கண் இல்லை
போலியாய்ப் பொருந்தும் மேக்கப் இல்லை
ஆனாலும்
நீ தான் என் உலக அழகி -
உன் நிழற்படம் காணும் போதெல்லாம் உணர்கிறேன்.
அம்மா -
என் பெயரை விடவும் இனிமையாய் இருக்கிறது
இந்த வார்த்தை
நீ என்னை விளிக்கின்ற போது.