இயற்கையாகவே நான் ஒரு நல்ல கவிதை ரசிகை. நான் ரசித்த ஒரு சில பாடல் வரிகள் இங்கே...
அத்திக்காய் காய் காய் - விவரம் தெரியாத வயதில் கேட்ட போது பிடிக்கவேயில்லை. இப்போது கவிஞரின் திறமையை மெச்சுகிறேன்.
முருகன் என்றால் அழகன் என்று தமிழ் மொழி கூறும்
அழகன் எந்தன் குமரன் என்று மனமொழி கூறும்
தன் குழந்தை அழகாக இருக்கிறதே என்று மனதுக்குள் மட்டும் வியக்கும் வார்த்தைகள்.
பொன்னொன்று கண்டேன் பெண்ணங்கு இல்லை - அண்ணனின் நிலையையும் தம்பியின் நிலையையும் நன்றாக விளக்கியிருப்பார் கவிஞர்.
உடலுக்குள் எங்கே உயிருள்ளதென்பதும் உயிருக்குள் காதல் எங்குள்ளதென்பதும் - காதல் மட்டுமல்ல, உண்மை, நேர்மை, கருணை, கோபம், பொறாமை இதெல்லாம் கலந்த attitude எங்குள்ளது என்று நாம் எல்லாருமே அதிசயித்திருப்போம்.
கண்ணாடிக்கு விளக்கம் தரும் (புதுப்) பொண்டாட்டியின் "அதில் என்னைக் காண்கிறேன், அது உன்னைக் காட்டுதே"
ஒவ்வொரு பற்களிலும் சிரித்தேன். இலக்கணப்பிழை இருந்தாலும் இதைவிட சந்தோஷத்தை எப்படி வெளிப்படுத்துவது?
விடியல் வந்த பின்னாலும் விடியாத இரவு எது? பூ வாசம் வீசும் உந்தன் கூந்தலடி
இவ்வுலகம் இருண்ட பின்னும் இருளாத வானம் எது? கதிர் வந்து பாயும் உந்தன் கண்களடி
இரு எதிர்மறையான விஷயங்களை ஒரே பொருளுக்காகக் கையாண்டதற்காக கவிஞருக்கு ஒரு "ஓ".
இதே வரிசையில் இன்னொன்று -
கவிதைக்கு பொய் அழகு - உண்மை உண்மை. கவிதையே அழகு.
இது குழந்தை பாடும் தாலாட்டு - இதை மாதிரி பாடல் எனக்கு தெரிந்து இது ஒன்று தான்.
வளையாத மூங்கிலில் ராகம் வளைஞ்சு ஓடுதே - அற்புதமான கையாளல்.
இது தவிர இரு ஹைக்கூ கவிதைகள் எங்கோ படித்தது, இன்னும் நினைவில் -
கதவைத் திறந்து வை
யார் வருகிறார்களோ இல்லையோ
காற்று வரும்
எதைக் கேட்டாலும் வெட்கத்தையே தருகிறாயே
வெட்கத்தைக் கேட்டால் என்ன தருவாய்?
இன்னும் சில, இன்னொரு இடுகையில்...

சித்திரை மாதத்தை நான் நனைத்து கோடையில் உனக்கொரு குளிர் கொடுப்பேன்
மார்கழி மாதத்தை நான் எரித்து முன்பனிக் காலத்தில் அனல் கொடுப்பேன்
வானமகள் நாணுகிறாள், வேறு உடை பூணுகிறாள் - என்ன ஒரு உவமை? ரஜினி பாணியில் சொல்ல வேண்டுமென்றால் "ஹாட்ஸ் ஆஃப்"